தகவல் தமிழ்
லண்டனில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி உங்கள் பயன்களை திட்டமிட்டு மேற்கொள்ளவும் மலிவான கட்டணங்களைக் கண்டறியவும் இந்த ஆவணங்கள் உங்களுக்கு உதவும். மேலும் ஓட்டுநர்களுக்காக நெரிசல் கட்டணம் மற்றும் குறைந்த உமிழ்ச்சி மண்டலம் பற்றிய தகவல்களும் உள்ளன.
லண்டனின் மின்னணு பயணச்சீட்டு அமைப்பு ஓய்ஸ்டர் பற்றிய அதிகமான தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வரைபடங்கள்
- ட்யூப் வரைபடம் (PDF 2.40MB)
லண்டன் தரையின் கீழ் ரயில், லண்டன் தரை மேல் ரயில் மற்றும் டோக்லாண்ட்ஸ் இலகு ரயில்வே [Docklands Light Railway – DLR] ஆகியவற்றின் பெரும்பாகப் பிரிவுகள், நிலையங்கள், தண்டவாளங்கள் போன்றவற்றை இது உள்ளடக்கியிருக்கின்றது.
கட்டணங்கள், பயணச்சீட்டுக்கள் மற்றும் ஓய்ஸ்டர்
எங்கள் தொடுதிரைச் சீட்டுப் பொறிகளில் உள்ள புதிய மொழி வசதிகளைப் பயன்படுத்தி, நீங்கள் தற்போது தமிழில் சீட்டுக்களை வாங்கலாம் அல்லது ஒய்ஸ்டரில் பணநிரப்புதல் செய்யலாம்.
லண்டனில் வாகனம் ஓட்டுதல் – நெரிசல் கட்டணம் விதித்ததல் மற்றும் போக்குவரத்து செயலாக்கம்
நெரிசல் கட்டணம் விதித்தல் தொடர்பான உதவிக்கு தமிழில் விவரங்களை அறிய +44 (0) 845 900 1234 என்ற இலக்கத்தைச் சுழற்றி தெரிவு 5-ஐ அழுத்தவும்.
Barclays Cycle Hire திட்டம்
ஆயிரக்கணக்கான சைக்கிள்களும், நூற்றுக்கணக்கான சைக்கிள் தரிப்பு முனைகளும், ஒவ்வொருநாளும், 24 மணிநேரமும், கிடைக்கும் வசதி கொண்ட Barclays Cycle Hire திட்டம், இலண்டனில் ஊர்கோலம் செல்ல இலகுவான, மகிழ்வூட்டும் வழியாக அமைகிறது.
தேம்ஸ் நதிப் படகுச் சேவைகளுக்கான வழிகாட்டி
-
தேம்ஸ் நதிப் படகுச் சேவைகள் வழிகாட்டியை உங்கள் மொழியில் பெற்றுக்கொள்ள, தொடர்பு கொள்ளவும்:
K International plc.
14 Davy Avenue
Knowlhill
Milton Keynes
MK5 8PL
தொலைபேசி: 0800 298 3009
Transport for London
